கோவை: அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர் தற்கொலை முயற்சி

கோவை: அரசு மருத்துவமனையில் தூய்மைப் பணியாளர் தற்கொலை முயற்சி
X
அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரியும் 35 வயது பெண் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரியும் 35 வயது நீலவேணி என்பவர் நேற்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூலூர் கோடாங்கிப்பாளையத்தைச் சேர்ந்த நீலவேணி, மருத்துவமனை ஊழியர்கள் சிலர் தங்கள் சங்கத்தில் சேருமாறு வற்புறுத்தியதாகவும், அவர் மறுத்ததால் தகாத வார்த்தைகளால் பேசி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்த மன உளைச்சல் காரணமாக, நேற்று காலை வழக்கம்போல் பணிக்கு வந்த நீலவேணி, வாழ்க்கையில் விரக்தியடைந்து சாணி பவுடரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மயங்கி விழுந்த அவரைக் கண்ட சக ஊழியர்கள் உடனடியாக மீட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.
Next Story