வட்ட வழங்கல் அலுவலகம் தரை தளத்தில் செயல்பட கோரிக்கை

X
Komarapalayam King 24x7 |31 May 2025 7:19 PM ISTகுமாரபாளையம் தாலுக்கா அலுவலக வளாகத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் தரை தளத்தில் செயல்பட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் தாலுக்கா அலுவலத்தில் வட்ட வழங்கல் அலுவலகம் மேல் தளத்தில் அமைந்துள்ளது. இதனால் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்டோர் படி ஏறி வர, பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். புதிய ரேசன் கார்டில் ஆதார் பதிவு, உள்ளிட்ட சில விபரங்கள் கேட்கவும், அதனை சரி செய்து கொண்டு வந்து விண்ணப்பிக்கவும் பல முறை, வட்ட வழங்கல் அலுவலகம் வர வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளதால், வட்ட வழங்கல் அலுவலகம் தரை தளத்தில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
