அரியலூர், ஜெயங்கொண்டம் அரசு கலைக் கல்லூரிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடக்கம்

X
அரியலூர், மே 31- அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் திங்கள்கிழமை (ஜூன் 2) முதல் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்குகிறறது. இதுகுறித்து அரியலூர் அரசு கலைக் கல்லூரி முதல்வர் சித்ரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான இளங்கலை மற்றும் இளம் அறிவியல் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2}ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. ஜூன் 2, 3 ஆகிய தேதிகளில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்களுக்கான சிறறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெறுகிறது.ஜூன் 4}இல் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 5}இல் வணிகவியல் பாடப் பிரிவுக்கும், ஜூன் 6}இல் தமிழ்,ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வுக்கு வரும்போது போட்டோ, தேவையான அனைத்து சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல்களையும் எடுத்துவர வேண்டும். சிறப்பு ஒதுக்கீட்டுக் கலந்தாய்வில் கலந்து கொள்ள அதற்கான சான்றிதழ்கள், இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் (அனைத்து பக்கங்கள்) 2 நகல்கள் கட்டாயம் எடுத்து வரவேண்டும். விண்ணப்பித்தவர்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளமான http://www.gacariyalur.ac.in/என்றற இணையதளத்தில் காணலாம். மேலும் சந்தேகங்களுக்கு கல்லூரி தொலைபேசி 04329}222050 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம். ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிகழாண்டிற்கான இளங்கலை மற்றும் இளமறிவியல் மாணவ, மாணவியர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 2 ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. முதல் நாளில் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படை வீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 5}இல் தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 6}இல் கணிதம், கணினி அறிவியல் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. மாணவ, மாணவியர் கலந்தாய்வுக்கு குறித்த நேரத்துக்கு 30 நிமிடத்துக்கு முன்னதாக கட்டாயம் பெற்றோர் அல்லது பாதுகாவலர் ஒருவருடன் வருகை தரவேண்டும். விண்ணப்பித்தவர்களின் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் கல்லூரி இணையதளமான http://www.gascjayankondam.ac.in/ என்ற இணையதளத்தில் 30.5.2025 முதல் காணலாம்.
Next Story

