முதியவர் மாயம் போலீசார் விசாரணை

முதியவர் மாயம் போலீசார் விசாரணை
X
குமாரபாளையத்தில் முதியவர் மாயமானதால், குமாரபாளையம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
குமாரபாளையம் காந்திநகர் பகுதியில் வசித்து வந்தவர் தனுஷ்கோடி, 72. இவர் நேற்றுமுன்தினம் காலை 05:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இவரது மகனும், உணவு பாதுகாப்பு துறை அலுவலருமான ரெங்கநாதன், குமாரபாளையம் போலீசில் புகார் செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story