கோயில் குத்தகை எதற்காக தகராறு ஆதி திராவிட இளைஞர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு
மாற்று சமூகத்தைச் சார்ந்த நபர்கள் கொலைவெறி தாக்குதல் ஆதி திராவிட பகுதியைச் சேர்ந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதி பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், ஆய்க்குடி கிராமம் த.தமிழ்வேந்தன் திமுக கிளை செயலாளர், ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்தவர், அதே ஊரில் சாதி இந்துக்கள் கட்டுப்பாட்டில் உள்ள அய்யனார் கோவில் நிலத்தை மூன்று வருட குத்தகைக்கு ஏலம் மூலம் ஏக்கர் 1க்கு ₹10500 வீதம் மூன்று ஏக்கர் எடுத்து பயிர் செய்துள்ளார்.. இதில் முதல் வருட குத்தகை தொகையை முன் பணமாக கொடுத்து விட வேண்டும், அடுத்த இரண்டு வருட தொகையை காலக்கெடு முடிந்தவுடன் கொடுக்க வேண்டும். மூன்று வருட குத்தகை முடிவுற்றதை அடுத்து பணத்தை கட்டி புதுப்பித்துக் கொள்ள ஊர் தண்டாரா மூலம் இரு தரப்பினரும் கலந்துகொள்ள வேண்டும் என்று 30.05.2025 வெள்ளிக்கிழமை மாலை 6மணிக்கு அறிவிப்பு செய்கின்றனர்... இதில் தமிழ்வேந்தன் என்பவருக்கு சாதிஇந்துக்களை சார்ந்தவர் ஒருவர் மூலம் தகவல் கொடுத்து வரவழைக்கப்படுகிறார் அங்கு தமிழ்வேந்தன் போவதற்கு முன்பாக ஏலம் விட்டு முடித்து விடுகிறார்கள் அதுக்கு இவர் ஏன் இந்த ஏலத்தை நான் வருவதற்குள் முடித்தீர்கள் அப்படி என்று கேட்டதற்கு நாங்கள் அப்படித்தான் முடிப்போம் நீ உன் பழைய பாக்கி மட்டும் கட்டிவிட்டு போடா பறையர்களுக்கு எல்லாம் நிலம் இனிமேல் தர முடியாது என்று கூறுகின்றனர் அதற்கு இவர் இது ஒன்றும் உங்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல பொதுவானது அரசு அறநிலையத்துறைக்கு சொந்தமானது.. அனைவருக்கும் சொந்தமானது.. எனவே நான் அரசு அறநிலையத்துறை அதிகாரியிடம் பேசுகிறேன் என்று அப்பொழுது தனது பையில் இருந்த தொலைபேசியை எடுத்து போன் செய்துள்ளார்.. இதில் ஆத்திரமடைந்த ஜாதி வெறியர்கள் உடனடியாக தமிழ்வேந்தனை கடுமையாக அடித்து உதைத்து கொலைவெறி தாக்குதல் நடத்தினர். (சுமார் 60 பேர் கொண்ட கும்பல்) இதில் அவரது வலது கண் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.. அவருடைய போன் உடைக்கப்பட்டுள்ளது அவர் கொண்டு சென்ற 63,000 பணம் பிடுங்கப்பட்டுள்ளது.. கேள்விப்பட்டு போன ஆதிதிராவிட வகுப்பை சார்ந்த மேலும் இரண்டு பேர் மண்டை உடைக்கப்பட்டுள்ளது.. மூன்று பேரும் அங்கிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. சம்பவம் தகவல் அறிந்த மங்களமேடு காவல்துறையினர் பாதிக்கப்பட்ட நபர்களிடம் வந்து புகாரை பெற்று விட்டு ஜாதி வெறியர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு இருக்குன்னு ஆபத்தான நிலையில் திருச்சி பெற்று வரும் தாழ்த்தப்பட்ட பகுதியைச் சார்ந்தவர் மீது வடக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர் தகவல் தெரிந்த ஆதிதிராவிட பகுதியில் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பெரம்பலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் அ.கலையரசன் மாவட்ட செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் மு.உதயகுமார் மாவட்ட அமைப்பாளர் சி.கதிர்வாணன் மாவட்ட துணை அமைப்பாளர் ஆய்க்குடி சி.அருள் பெரம்பலூர் ஒன்றிய செயலாளர்கள்: சி.பாஸ்கர் எம்.பி.மனோகரன் ஆய்க்குடி கிராம விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு மனு கொடுத்தனர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் காவல்துறை கண்டித்து மாபெரும் போராட்டம் நடைபெறும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story