வட்டாரத் தோட்டக்கலை துறை சார்பில் வேம்பி ஊராட்சியில் விழா நடைபெற்றது

X
விக்கிரவாண்டி வட்டார தோட்டக்கலை துறை சார்பில் வேம்பியில் நடந்த விழாவிற்கு, ஊராட்சி தலைவி தனலட்சுமி ரவி, ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி முன்னிலை வகித்தனர். உதவி தோட்டக்கலை அலுவலர் அஜித் குமார் வரவேற்றார்.உதவி இயக்குனர் ஜெய்சன் தலைமை தாங்கி பேசியதாவது; விக்கிரவாண்டி வட்டரத்தில் உள்ள 58 கிராமங்களில் திட்டத்தை செயல்படுத்தி இதன் மூலம் வேளாண்மை விரிவாக்க சேவைகள், அரசின் திட்டங்கள் உழவர்களுக்கு அவர்களின் கிராமத்திலேயே வழங்கப்படும் எனவும், திட்ட முகாம்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை 2 மற்றும்,4வது வெள்ளிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள இரண்டு கிராமங்களில் நடத்தப்படும் என கூறினார்.உதவி தோட்டக்கலை அலுவலர் புனிதா, துணை வேளாண்மை அலுவலர் ரமேஷ் குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள், முன்னோடி விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.
Next Story

