திண்டிவனம் நகர மன்ற கூட்டத்தில் கடும் வாக்குவாதம் பரபரப்பு

X
திண்டிவனம் நகர்மன்ற கூட்டம், நேற்று காலை நகர்மன்ற தலைவர் நிர்மலாரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. நகர்மன்ற துணை தலைவர் ராஜலட்சுமிவெற்றிவேல், ஆணையாளர் குமரன், பொறியாளர் சரோஜா, மேலாளர் நெடுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் சிலர் கேள்வி எழுப்பினர் அதில்தி.மு.க., கவுன்சிலர் ரவிச்சந்திரன்: திண்டிவனம்-சென்னை சாலையில், ரூ.25.15 கோடி செலவில், நகராட்சி சார்பில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடந்து வருகின்றது. இதில் சுமார் 95 சதவீத பணிகள் முடிந்துள்ளது. புதிய பஸ் நிலையம் கட்டும் பணிகள் கடந்த 6 மாதங்களாக நடைபெறவில்லை. பஸ் நிலைய ஒப்பந்ததாரரை கேட்டால், நிலுவை பணம் நகராட்சி தரவில்லை. அதனால்தான் வேலை நடைபெற வில்லை என கூறுவதாக தெரிவித்தார்.இதற்கு ஆணையாளர், ஒப்பந்தாரரருக்கு 90 சதவீத தொகை வழங்கப்பட்டு விட்டது. தற்போது கூடுதல் பணிக்காக, ரூ.2.45 கோடி கேட்கிறார். இந்தப் பணிக்கான விபரங்கள் கூறாமல் பணம் எப்படி தரமுடியும். இதுவரை நகராட்சி சார்பில் 22.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. பணிகளை முடித்து கொடுத்தால்தான் மீதி பணம் கொடுக்க முடியும் என கூறினார்.இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் பாபு, சின்னச்சாமி உள்ளிட்டோர், பணிகளை முடிக்கவில்லை என்றால் ஒப்பந்ததாரை ரத்து செய்யுங்கள் என்று கூறினார். இதனால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story

