மாணவர் சேர்க்கை

X
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் சி.ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 2025-26-ஆம் கல்வி ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பிற்கான, முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை முதல் கட்ட கலந்தாய்வு ஜூன் 2 மற்றும் 3 ஆம் தேதி காலை 9 மணி முதல், சிறப்பு ஒதுக்கீடு (அதாவது மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், தேசிய மாணவர் படை, பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அந்தமான் நிக்கோபார் தமிழ் மாணாக்கர்கள்) பிரிவுக்கு நடைபெற உள்ளது. ஜூன் 4-ஆம் தேதி இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், அரசியல் அறிவியல், பொருளியல் பிரிவுகள்க்கும், ஜூன் 5 ஆம் தேதி இளம் அறிவியல் கணிதம், வேதியியல், இயற்பியல், கணினி அறிவியல் பிரிவுக்கும் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12ஆம் தேதியன்று அனைத்து கலை பிரிவுகளான இளங்கலை தமிழ், ஆங்கிலம், வணிகவியல், வணிக நிர்வாகவியல், அரசியல் அறிவியல், பொருளியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 13ஆம் தேதியன்று அனைத்து அறிவியல் பாடப் பிரிவுகளான இளம் அறிவியல் கணிதம், வேதியல், இயற்பியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் நடைபெற உள்ளது. கலந்தாய்விற்கு வருவோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தின் நகல், பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல், பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் டூ வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அசல் மற்றும் நகல் (தலைமை ஆசிரியர் சான்றுடன்), பள்ளி மாற்றுச் சான்றிதழ், சாதி சான்றிதழ், சிறப்பு ஒதுக்கீட்டிற்கான சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-4, வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை அசல் மற்றும் நகல் ஆகியவற்றுடன், மாணவர்கள் தங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு கல்லூரி வளாகத்திற்கு வருகை தர வேண்டும். கலந்தாய்வில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னரே, சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் கல்விக் கட்டணம் செலுத்த அறிவுறுத்தப்பட்டு. அதன் பின்னரே சேர்க்கை உதவி செய்யப்படும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்
Next Story

