தென் தமிழ்நாட்டில் கனமழை பாதிப்பு போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு.

X
அரியலூர், மே.31- தென்தமிழ்நாட்டின் கடைகோடி பகுதியான கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி, கடையல் பேரூராட்சி பத்துகாணி பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன் பெய்த கனமழையால் ரப்பர் மரங்கள் மின்கம்பங்கள் மீது சாய்ந்து மின் கம்பங்கள் மற்றும் மின்கம்பி,கள் பாதிப்படைந்ததையொட்டி அப்பகுதியில் புதிய மின் கம்பங்கள் மாற்றும் பணி மற்றும் பராமரிப்பு பணிகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடித்து மின்சாரம் வழங்க அறிவுறுத்தினார். ஆய்வின்போது விளவங்கோடு எம் எல் ஏ முனைவர் தாரகைகத்பட், திருநெல்வேலி மின்வாரிய தலைமை பொறியாளர் சந்திரா, கன்னியாகுமரி மேற்பார்வை பொறியாளர் ஜவகர் முத்து, செயற்பொறியாளர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள், மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

