கோவை: சிறுவன் ஓட்டிச் சென்ற சரக்கு வேன் மோதி பெண் பலி !

X
கோவை, சின்னியம்பாளையத்தில் 17 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற சரக்கு வேன் மோதி செல்வி என்ற பெண் உயிரிழந்தார். படுகாயமடைந்த அவரது கணவர் மாகாளி மற்றும் ரங்கம்மாள் சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த செல்வி, தனது கணவர் மாகாளி மற்றும் ரங்கம்மாளுடன் ஏ.டி.எம். சென்றுவிட்டு திரும்பும்போது, கோவை அவிநாசி சாலை சின்னியம்பாளையம் அருகே வேகமாக வந்த சரக்கு வேன் இவர்கள் மீது மோதியது. இதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி செல்வி உயிரிழந்தார். விசாரணையில் சரக்கு வேனை ஓட்டி வந்தது 17 வயது சிறுவன் எனத் தெரியவந்தது. இதையடுத்து, சிறுவனுக்கு வாகனத்தை ஓட்டக் கொடுத்த உரிமையாளரான பைலட் ராஜா என்பவரை போலீசார் நேற்று கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனுக்கு 15 நாட்கள் போக்குவரத்து சரி செய்யும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது.
Next Story

