கிருஷ்ணகிரி: டூவீலர் மீது லாரி மோதி வாலிபர் பலி.

X
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருகே உள்ள எம்.ஜி.அள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் தம்பிதுரை (20). இவர் கடந்த 30-ஆம் தேதி டூவீலரில் திருவண்ணாமலை -கிருஷ்ணகிரி சாலை வேட்டியம்பட்டி ஆலமரத்து கொட்டாய் போருந்து நிறுத்தம் அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தம்பிதுரையை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே தம்பிதுரை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
Next Story

