முதல்வர் ரோட் ஷோ. ட்ரோன் கேமராவால் பரபரப்பு
மதுரையில் நேற்று (மே.31)மாலை 5 மணியளவில் ரோட் ஷோவில் பங்குபெற தனியார் ஓட்டலில் இருந்து புறப்பட்டு மண்டேலா நகர், பெருங்குடி, அவனியாபுரம் பகுதி வழியாக முதல்வர் பாதுகாப்பு வாகனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் ரோட் ஷோ நிகழ்ச்சியில் பொது மக்களுடன் கலந்து கொண்டார். அப்போது அவனியாபுரம் பெரியார் சிலை அருகே ட்ரோன் கேமரா பறந்து முதல்வர் வரும் பாதையில் வீடியோ எடுத்தது. இதனை கண்ட முதல்வர் பாதுகாப்பு அதிகாரிகள் ட்ரோன் கேமராவை கைப்பற்றினர் மதுரை மாவட்ட ஆட்சியர் முதல்வர் செல்லும் பகுதியில் ட்ரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் முதல்வர் வரும் பாதையில் ட்ரோன் கேமராவிற்கு அனுமதி அளித்தது யார் என போலீசார் விசாரணை செய்தனர். ட்ரோன் கேமரா தொடர்பாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் சென்னை வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில் நுட்ப பிரிவு பிரமுகர் அருண்குமார் அனுமதி கேட்டதன்பேரில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் அனுமதி அளித்துள்ளனர் என்பது தெரிய வந்தது. போலீசார் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story




