கடையநல்லூரில் கஞ்சா விற்றதாக இருவா் கைது

கடையநல்லூரில் கஞ்சா விற்றதாக இருவா் கைது
X
கஞ்சா விற்றதாக இருவா் கைது
தென்காசி மாவட்டம் கடையநல்லூா் காவல் ஆய்வாளா் ஆடிவேல் தலைமையிலான போலீஸாா் மதுரை - தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அட்டைகுளம் அருகே நின்று கொண்டிருந்தவரின் பையை சோதனையிட்டபோது, அதில் ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. விசாரணையில், அவா் மாறாந்தையை சோ்ந்த மாரியப்பன் மகன் கனிச்செல்வம்(23) என்பது தெரியவந்தது. அவரைக் கைது செய்த போலீஸாா், அவருக்கு கஞ்சா விற்ற சிவலாா்குளத்தைச் சோ்ந்த பொ்லினையும்(24) கைது செய்தனா்.
Next Story