ஊத்துமலையில் மரத்திலிருந்து தவறி விழுந்து விவசாயி உயிரிழப்பு

X
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஊத்துமலை அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சண்முகையா மகன் சுப்பிரமணியன் (40). விவசாயியான இவருக்கு திருமணமாகவில்லையாம். இந்நிலையில் அவா் உறவினரின் தோட்டத்திலுள்ள தென்னை மரத்தில் ஏறி காய்களைப் பறித்துக் கொண்டிருந்தபோது, கால் தவறி கீழே விழுந்தாராம். காயமடைந்த அவரை மீட்டு ஊத்துமலை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டுசென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். ஊத்துமலை போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

