சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில்

சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில்
X
அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரன் அறிவுரை
சேலம் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி முன்னிலை வகித்தார். இதில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் கலந்து கொண்டு தென்மேற்கு பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தென்மேற்கு பருவமழையானது விரைவில் தொடங்க உள்ளதால் தேவையான முன்னேற்பாடு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பாக வெள்ளசேதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வருவாய்த்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை, மின்சாரத்துறை, வேளாண்மைத்துறை, நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்ட அனைத்து துறையினரும் இணைந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. என கூறினார். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கப்பட்ட அவசர மைதானத்தில் ஆய்வு செய்தார்.
Next Story