தேசிய வேளாண்மை - ஊரக வளர்ச்சி வங்கியின்

மாவட்ட வளர்ச்சி அலுவலகம் திறப்பு விழா
நாகை சட்டையப்பர் வீதியில், தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் மாவட்ட வளர்ச்சி அலுவலகத்தை, துணை மேலாண் இயக்குனர்கள் மருத்துவர் அஜய் கே சூத், மருத்துவர் ஜி.எஸ்.ராவத் ஆகியோர் காணொலி மூலம் திறந்து வைத்தனர். நபார்டு வங்கியின் நாகை மாவட்ட வளர்ச்சி அலுவலர் சு.விஷ்வந்த் கண்ணா வரவேற்று, நபார்டு வங்கியின் பணிகள் குறித்து விவரித்தார். விழாவில், கீழ்வேளுர் வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் முதல்வர் மருத்துவர் ஜி.ரவி, சிக்கல் வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.கோபாலகண்ணன், கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் மருத்துவர் சுரேஷ், சுவிட் தொண்டு நிறுவன இயக்குனர் ராஜேந்திரன், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகர், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமிய சுய வேலை வாய்ப்பு பயிற்சி மையத்தின் இயக்குனர் நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story