ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் வேன் மோதி விபத்து

ஏற்காடு-குப்பனூர் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் வேன் மோதி விபத்து
X
சென்னையை சேர்ந்த 21 பேர் காயம்
சென்னையை சேர்ந்த 21 பேர் வேனில் ஏற்காட்டிற்கு சுற்றுலா வந்தனர். இந்த வேனை சென்னையை சேர்ந்த சுந்தர் (வயது39) என்பவர் ஓட்டி வந்தார். நேற்று காலை முதல் ஏற்காட்டில் அவர்கள் பல்வேறு இடங்களை சுற்றி பார்த்தனர். பின்னர் மாலையில் சென்னை செல்ல ஏற்காடு, குப்பனூர் மலைப்பாதை வழியாக சேலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். வாழவந்தி அடுத்த ஆத்துப்பாலம் அருகே வேன் சென்ற போது கொண்டை ஊசி வளைவில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவரில் மோதியது. இதில் வேனின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் வேனில் வந்த கருணாகரன் (54) படுகாயம் அடைந்தார். மேலும் 20 பேர் ேலசான காயம் அடைந்தனர். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஏற்காடு வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஏற்காடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story