நகை கடன் புதிய விதிமுறை ஒத்திவைப்பு நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வரவேற்பு! புதிய விதிமுறைக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தல் ய்

X
Namakkal King 24x7 |1 Jun 2025 10:43 AM ISTபுதிய நடைமுறையை நிரந்தரமாக தடை விதித்து விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் ஆகியோர் எளிதாக கடன் பெற உள்ள ஒரே வழி நகைக்கடன் மட்டுமே ஆகவே அதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது என்பதனை மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறேன்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினருமான ஈஸ்வரன் எம்எல்ஏ அறிவுறுத்தலுக்கிணங்க,நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...ரிசர்வ் வங்கி நகை அடமானத்திற்கான பல்வேறு கடுமையான விதிமுறைகளுடன் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.இதனால் விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் என அனைவரும் கடுமையாக பாதிப்படைய வேண்டிய நிலை வரும் என்பதனை தெளிவாக எடுத்துரைத்து மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் அவர்களுக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் அதனை தொடர்ந்து ரிசர்வ் வங்கி மூலம் வெளிவந்த அறிவிப்பின் படி நகைக்கடன் அடமானத்திற்கான புதிய விதிமுறைகளை அடுத்த ஆண்டு (2026) ஜனவரி வரை ஒத்திவைக்கப்படுவதாகவும் ரூபாய் 2 லட்சத்திற்கு குறைவாக கடன் வாங்குபவர்களுக்கு விலக்களிக்கவும் மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது.இதற்கு மத்திய நிதி அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதுடன் மேற்கண்ட இந்த புதிய நடைமுறையை நிரந்தரமாக தடை விதித்து விவசாயிகள் வியாபாரிகள் பொதுமக்கள் ஆகியோர் எளிதாக கடன் பெற உள்ள ஒரே வழி நகைக்கடன் மட்டுமே ஆகவே அதற்கு எவ்வித தடையும் இருக்கக் கூடாது என்பதனை மீண்டும் வலியுறுத்திக் கொள்கிறேன். இவ்வாறு அவர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story
