மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் நாளை மறுநாள் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

X
சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 8.30 மணிக்கு சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் 4 ரோடு அருகே அண்ணா பூங்கா வளாகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, பேரூர், ஊராட்சி கிளை செயலாளர்கள், பேரூர் வார்டு செயலாளர்கள், மாநகர செயலாளர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளை சேர்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி மற்றும் பேரூர் அமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.
Next Story

