கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை ஆய்வு செய்த அமைச்சர்.
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று ( ஜூன் 1)ஆய்வு மேற்கொண்டு வாசகர்களின் வருகை எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார் .அங்குள்ள மாற்றுத் திறனாளிகள் பிரிவில் மாற்றுத் திறன் மாணவர்களுக்கு ஏற்றவாறு பாடப் புத்தகங்களை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. அதனை பார்வையிட்டு பணியாளரிடம் கலந்துரையாடினார் அந்நூலகத்தில் நடைபெற்ற “கோடைக் கொண்டாட்டம்” பயிற்சி முகாம் மற்றும் “CHESS@KCL 2025” சதுரங்கப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவச் செல்வங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
Next Story



