சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு

சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு
X
கொடியேற்ற நிகழ்ச்சி இன்று காலை நடந்தது
சேலம் டவுனில் புகழ்பெற்ற அருள்மிகு சுகவனேஸ்வரர் ஆலயம் உள்ளது . இங்கு வருடந்தோறும் வைகாசி விசாக தேர் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வருகிற 9ந்தேதி வைகாசி விசாக தேர் திருவிழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. வைகாசி விசாக தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று காலை சுகவனேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. விழாவை ஒட்டி காலை சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்கள் அபிஷேகம் நடந்தது.பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது .விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர் சோனா வள்ளியப்பா மற்றும் அறங்காவலர்கள் கலந்து கொண்டனர். இதனையடுத்து கொடிமரத்திற்க்கு சிறப்பு பூஜைகள் செய்யபட்டு கொடியேற்றும் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்களும் கலந்து கொண்டு சுவாமியை வணங்கிச் சென்றனர்.
Next Story