பள்ளிகளுக்கு புத்தகங்களை அனுப்பும் பணி

X
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் என 1983 பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் தற்போது வகுப்பறைகள், பள்ளி வளாகம், கழிப்பறைகள், சத்துணவு வழங்க பயன்படுத்தப்படும் சமையல் உபகரணங்கள், ஆய்வகங்கள், விளையாட்டு மைதானங்கள் சுத்தப்படுத்தி தூய்மையாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பள்ளிகள் திறக்கப்பட்டதும் நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் ஆகியவையும் அந்தந்த பள்ளிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கூடுதலாக புத்தகங்கள், உபகரணங்கள் தேவைப்பட்டால் அவற்றை வழங்குவதற்காக திண்டுக்கல்லில், பழநி ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
Next Story

