இந்து மயானத்தில் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பு முயற்சி நடவடிக்கை எடுக்க வி.எச்.பி., இந்து முன்னணி போலீசில் புகார்
Komarapalayam King 24x7 |1 Jun 2025 4:11 PM ISTகுமாரபாளையம் அருகே இந்து மயானத்தில் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பு முயற்சி செய்வதால், உரிய நடவடிக்கை எடுக்க வி.எச்.பி., இந்து முன்னணி சார்பில் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது.
குமாரபாளையம் அருகே இந்து மயானத்தில் கிறிஸ்தவர்கள் ஆக்கிரமிப்பு முயற்சி செய்வதால், உரிய நடவடிக்கை எடுக்க வி.எச்.பி., இந்து முன்னணி சார்பில் போலீசில் புகார் மனு கொடுக்கப்பட்டது. இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : குமாரபாளையம் ராஜம் தியேட்டர் அருகே, குளத்துக்காடு அருகே அமைந்துள்ள இந்து மக்களுக்கான சமத்துவ மயானத்தில், கிறிஸ்தவ மதத்தினர் சடலங்களை அடக்கம் செய்வதுடன், ஆக்கிரமிப்பு செய்வதும், மாத சின்னங்களை வைப்பதுமாக உள்ளனர். இதனால் மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். அவர்கள் மீது த்ஜக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், எண்கள் சமுதாய மயானத்தை எங்களுக்கு மீட்டுத் தர வேண்டியும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சம்பந்தமாக, ஏற்கனவே, குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மயானம், சேலம், கோவை புறவழிச்சாலை அருகே உள்ளது. இந்த இடத்தில் தனியார் தொண்டு நிறுவனத்தார் பூச்செடிகள், மரங்கள் வைக்க இருப்பதால், மயானம் முழுதும், பொக்லின் கொண்டு நிலத்தை சமன் படுத்தி, மரக்கன்றுகள் வைக்க குழிகளும் தோண்டினர். மேலும் குளத்துக்காடு என்ற பகுதியில் உள்ள தட்டான்குட்டை ஊராட்சிக்குட்பட்ட மயானத்தில் கல்லறைகள் மீது குப்பைகள் மலை போல் குவித்து வைத்துள்ளனர். இதற்கு, நடராஜா நகர் ஜெபமாலை மாதா பேராலய பங்கு தந்தை பெலவெந்திரம், செயலர் இன்னாசிமுத்து, பொருளர் வின்சென்ட், கல்லறை பொறுப்பாளர் இருதயராஜ் ஆகியோர், குமாரபாளையம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை செய்து, இரு தரப்பினரை சமாதானம் செய்து, கல்லறை இருந்த இடத்தில் குப்பை கொட்டக்கூடாது எனவும், கல்லறை இடிக்கப்பட்ட இடத்தில் எவ்வித பணிகளும் செய்யக்கூடாது எனவும் பேசி அனுப்பினர். இதன் பின்னர்தான் கிறிஸ்தவர்கள் தங்கள் இடத்தை பிடித்து கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்து அமைப்பினர், சார்பில், கிறித்தவர்கள் இடம் ஆக்கிரமிப்பு செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால், போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர். இது குறித்து தட்டான்குட்டை ஊராட்சி அலுவலகத்தில் இந்து அமைப்பினர் சார்பில், இந்து மயானத்தில் மாற்று மதத்தினர் ஆக்கிரமிப்பு செய்வதை தடுக்க வேண்டும், என புகார் மனு கொடுக்கப்பட்டது. இதில் வி.ஹெச்.பி. நகர தலைவர் சுகுமார், இந்து முன்னணி நகர தலைவர் பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Next Story


