வெண்ணை மலையில் செல்போனில் அதிக நேரம் பேசிய மனைவியை திட்டிய கணவன்.விரக்தியில் விஷம் குடித்து மனைவி தற்கொலை.

வெண்ணை மலையில் செல்போனில் அதிக நேரம் பேசிய மனைவியை திட்டிய கணவன்.விரக்தியில் விஷம் குடித்து மனைவி தற்கொலை.
வெண்ணை மலையில் செல்போனில் அதிக நேரம் பேசிய மனைவியை திட்டிய கணவன்.விரக்தியில் விஷம் குடித்து மனைவி தற்கொலை. கரூர் மாவட்டம் , வெண்ணைமலை , கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த் மனைவி உமா மகேஸ்வரி வயது 38. இவர்கள் இருவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அண்மைக்காலமாகவே உமா மகேஸ்வரி செல்போனில் அதிக நேரம் பேசி வந்ததை கண்டித்த ஆனந்த் , மே 29ஆம் தேதி மாலை 5 மணி அளவில் மீண்டும் செல்போனில் பேசியதை பார்த்த ஆனந்த் ,தனது மனைவி உமா மகேஸ்வரியை திட்டி உள்ளார். இதனால் விரக்தி அடைந்த உமா மகேஸ்வரி எலிவிசம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆயினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த உமா மகேஸ்வரின் தாயார் முத்துலட்சுமி வயது 70- என்பவர் அளித்த புகாரின் பேரில் ,சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் , உயிரிழந்த உமா மகேஸ்வரியின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெங்கமேடு காவல்துறையினர்.
Next Story