அம்பிகை நகரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் விரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை.
அம்பிகை நகரில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர் விரக்தியில் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் , அரவக்குறிச்சி தாலுகா ,ராஜபுரம் அருகே கந்தர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் வயது 58. கடந்த 5- வருட காலமாகவே பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும் அவருக்கு குணமாகவில்லை. இதனால் விரக்தி மனப்பான்மையில் வாழ்ந்து வந்த ஆனந்தகுமார் , மே 30ம் தேதி மதியம் 3 மணி அளவில் அம்பிகை நகர் பகுதியில் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனை அறிந்த அவரது மகன் நிவாஸ் வயது 25 என்பவர் , தனது தந்தையை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த ஆனந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக நிவாஸ் அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , உயிரிழந்த ஆனந்த குமாரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் அரவக்குறிச்சி காவல் துறையினர்.
Next Story




