காவேரிப்பட்டணம் அருகே கழிவுநீா் கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

X
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகேயுள்ள சந்தாபுரம் அடுத்த உள்பட்ட முதலிகான்கொட்டாய் பகுதியில் காவேரிப்பட்டணம் - அகரம் சாலையில், சின்னசாமி என்பவரின் வீட்டின் அருகில் உள்ள கழிவுநீா் கால்வாயில் நேற்று துா்நாற்றம் வீசியது. பொதுமக்கள் அங்கு பார்த்தபோது கால்வாயில் சுமமார் 35 வயதுடைய ஆண் உடல் அழுகிய நிலையில் இருப்பதைபார்த்து அதிர்ச்சி அடைந்தனா். இதுகுறித்து, தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆண் சடலத்தை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

