பைக்கில் இருந்து விழுந்த கொத்தனார் சாவு

பைக்கில் இருந்து விழுந்த கொத்தனார் சாவு
X
தக்கலை
குமரி மாவட்டம் பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் (61). கொத்தனார். நேற்று முன் தினம் சுந்தர்ராஜ் சாமியார்மடத்திற்கு செல்வதற்காக மாவுவிளைப் பகுதி சேர்ந்த சுரேஷ் (45) என்பவரின் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். புலிப்பனம் பகுதியில் செல்லும் போது திடீரென சுந்தர்ராஜ் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே சரிந்து விழுந்தார். இதில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய சுரேஷும் உட்பட இரண்டு பேரும் கீழே விழுந்து  படுகாயம் அடைந்தனர்.        அக்கம் பக்கத்தினர் உடனே இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சுந்தர்ராஜ் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சுரேஷ் மார்த்தாண்டத்தில் ஒரு தனியார் மருத்துவமனையிலும்  சேர்க்கப்பட்டனர். இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மருத்துவ கல்லூரியில் சிகிட்சை பலனின்றி சுந்தர்ராஜ் நேற்று இரவு உயிரிழந்தார்.
Next Story