மாலப்பட்டியில் நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து.முதியவர் படுகாயம்.
மாலப்பட்டியில் நடந்து சென்றவர் மீது டூ வீலர் மோதி விபத்து.முதியவர் படுகாயம். கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா , காளியாப்பட்டி அருகே உள்ள சாலிகரைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் வயது 70. இவர் மே 30ம் தேதி காலை 8 மணி அளவில் , கரூர் - மாலப்பட்டி சாலையில்,நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் பின்னால் வந்த மாலபட்டியைச் சேர்ந்த காளியப்பன் என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் நடந்து சென்ற சுப்பிரமணியன் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணியனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் , அவரை தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அறிந்த சுப்பிரமணியன் உறவினர் ரவிச்சந்திரன் வயது 52 என்பவர் அளித்த புகாரின் பேரில் , சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் , டூவீலரை வேகமாகவும் , அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய காளியப்பன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வெள்ளியணை காவல்துறையினர்.
Next Story




