கீழப்புலியூர் குளத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் கீழப்புலியூர் பெரிய குளத்தில் குற்றாலம் ரோட்டரி சங்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. குற்றாலம் ரோட்டரி சங்க தலைவர் கை. முருகன் தலைமை வகித்து மரக்கன்றுகளை நடவு செய்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வேப்பமரம், புளியமரம், வாகைமரம், கொடுக்காப்புளிமரம் என பலவகையான 100 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மேலும் 500 மரங்கள் நடுவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை உதவிச் செயற்பொறியாளர் சுப்பிரமணியபாண்டியன், உதவிப் பொறியாளர் சண்முகவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு மரக கன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க நிர்வாகிகள் டாக்டர். அப்துல் அஜீஸ், முருகன், கை. கணேசமூர்த்தி, பா. பிரகாஷ், சைரஸ், ராமநாதன், நாரயணராஜா, கல்யாணகுமார், கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

