இரு நாட்களாக மின்னொளியில் நடந்த கிரிக்கெட் போட்டி

X
Komarapalayam King 24x7 |1 Jun 2025 7:28 PM ISTகுமாரபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் இரு நாட்களாக இரவு பகலாக மின்னொளியுடன் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.
குமாரபாளையம் எம்ஜிஆர் நகர் பகுதியில் எம்.ஜி.கிரிக்கெட் பாய்ஸ் குழுவினர் சார்பில்,கடந்த இரு நாட்களாக இரவு பகலாக மின்னொளியுடன் கிரிக்கெட் போட்டிகள் நடந்தது. இதில் குமாரபாளையம், பள்ளிபாளையம், ஈரோடு, திருச்செங்கோடு உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த 18 கிரிக்கெட் குழுவினர் பங்கேற்றனர். 1.2.3. என வெற்றி பெற்ற கிரிக்கெட் குழுவினருக்கு குமாரபாளையம் தாலுகா நில முகவர்கள் சங்கத்தின் சார்பில், சுழற் கோப்பை வழங்கப்பட்டது. முதல் பரிசை வென்ற பள்ளிபாளையம் கிரேசி பாய்ஸ் இரண்டாம் பரிசு பெற்ற எம்.ஜி பாய்ஸ், குமாரபாளையம் மூன்றாம் பரிசு வென்ற பள்ளிபாளையம் பாய்ஸ் அணியினருக்கு, குமாரபாளையம் தாலுக்கா நில முகவர்கள் நல முன்னேற்ற சங்க தலைவர் சின்னசாமி, துணைச் செயலாளர் ஸ்ரீதர், சங்க ஆலோசகர்கள் மணிகண்டன், பாண்டியன், சங்க காப்பாளர் மணி, இணைச் செயலாளர் சீனிவாசன் மற்றும் துணைத் தலைவர் வடிவேல், முன்னாள் சங்க பொருளாளர் சரவணன், குப்பாண்டபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கவிதா வேலுமணி ஆகியோர் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுத்தொகையினையும் சுழற் கோப்பையும் வழங்கி கௌரவித்தனர்
Next Story
