இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் மகளிர் பொருட்காட்சி

இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் மகளிர் பொருட்காட்சி
X
குமாரபாளையத்தில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் மகளிர் பொருட்காட்சி நடந்தது
குமாரபாளையத்தில் ஸ்திரி உடற்பயிற்சி மையம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் மகளிர் பொருட்காட்சி இரண்டு நாட்கள் நடந்தது. இதனை முன்னாள் அமைச்சரும், தற்போதைய குமாரபாளையம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான தங்கமணியின் துணைவியார் சாந்தி தங்கமணி, ஈரோடு தங்கம் மருத்துவமனை இயக்குனர் டாக்டர்  தங்கம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். பொதுமக்கள் பெருமளவில் இலவச மருத்துவ முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர். இத மருத்துவமுகாமில் ஈரோடு ஐ பவுண்டேசன், அர்னவ் ஆர்த்தோ கேர், சம்பு பல் மருத்துவமனை, டாக்டர்கள் நரேஷ் தனக்கோடி, சிபி விஷ்ணு, இளவரசு, மற்றும் உமா மருத்துவமனை டாக்டர்கள் செந்தில்குமார், கவிதா, ஆகியோர் பங்கேற்று பொதுமக்களுக்கு சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கினர். வீட்டு உபயோகப்பொருட்கள், ஆடைகள், அலங்கார பொருட்க;ள் உள்ளிட்ட பல அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது.
Next Story