சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்

சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
X
தாராபுரம் பகுதியில் சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம்
தாராபுரம் பகுதியில் கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கு உட்பட்ட பொள்ளாச்சி ரோடு, கோகுலம் காலனி செல்லும் சாலை, உடுமலை ரோடு உள்ளிட்ட பல்வேறு சாலைகள் தாராபுரம் நகராட்சியின் முகப்பு பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள சாலையோரம் குப்பைகள் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதோடு, குப்பைகள் மர்ம நபர்களால் தீ வைக்கப்படுவதால் புகை மூட்டம் ஏற்பட்டு சாலைகளில் செல்லும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story