துத்திப்பட்டு ஊராட்சியில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

X
திருப்பத்தூர் மாவட்டம் துத்திப்பட்டு ஊராட்சியில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சியில் சாலை அமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாதனூர் ஊராட்சி ஒன்றியம் துத்திபட்டு பகுதியில் பிந்துமாதவ பெருமாள் கோயில் உள்ளது. இக் கோயிலின் தேர் திருவிழா நடை பெற உள்ளது. தேரோடும் தெருக்கள் சேதம டைந்துள்ளன. சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் ஊராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர். ஆனால் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சாலை அமைக்க வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஆம்பூர் பேர்ணாம்பட்டு சாலையில் துத்திபட்டு பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். வட்டார வளர்ச்சி அலுவர் சி.சு ரேஷ்குமார், டிஎஸ்பி குமார், உமரபாத் காவல் நிலைய ஆய்வாளர் ரேகா, துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர். சுவிதா கணேஷ், துணை தலைவர். விஜய். ஊராட்சி செயலாளர். முரளி ஆகியோர் போராட் டத்தில் ஈடுபட்ட பொதுமக் களை ஊராட்சி அலுவலகத்திற்கு அழைத்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர். சாலை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித் தனர். இதையேற்று பொதுமக் கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Next Story

