தமிழ்நாடு கால்பந்து கழக தலைவர் சண்முகம் பேட்டி

தமிழ்நாடு கால்பந்து கழக தலைவர் சண்முகம் பேட்டி
X
தமிழ்நாடு கால்பந்து கழக தலைவர் சண்முகம் திண்டுக்கல்லில் பேட்டி
தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட திண்டுக்கல்லை சேர்ந்த அரசன் சண்முகம் திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாடு கால்பந்து கழகத்தின் தலைவர், துணை தலைவர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் சென்னையில் முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு பதிவான 82 ஓட்டுகளில் 44 ஓட்டுகளை பெற்று நான் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு கால்பந்து கழகம் சரியான செயல்பாடு இன்றி இருந்ததாக தெரிகிறது. எனவே இனிவரும் காலங்களில் கழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். அதுமட்டுமின்றி கால்பந்து வீரர், வீராங்கனைகள் முன்னேற்றத்திற்கும் பாடுபடுவேன். மேலும் கழகத்துக்கான நிதி ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுப்பதோடு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்படாமல் உள்ள கால்பந்து லீக் போட்டிகளை மீண்டும் நடத்த முயற்சி எடுப்பேன். விளையாட்டு துறைக்கு கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி விளையாட்டு துறையில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டுவர விரும்பும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி ஆகியோருக்கு தமிழ்நாடு கால்பந்து கழகம் சார்பில் நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.
Next Story