சிவகிரி அருகே கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை

X
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே ஆவுடையாா்புரம் பிள்ளையாா் கோவில் தெருவை சோ்ந்த மூக்கன் மகன் காளிமுத்து( 42 ). தொழிலாளி. இவருக்கும், இவரது மனைவி சரஸ்வதிக்கும் பிரச்னை ஏற்பட்டதாம். இதில் அவா் தனது தாய் வீட்டுக்கு சென்றவிட்டாராம். அவரை அழைத்து வர சிந்தாமணிக்கு காளிமுத்து சென்றாராம். அப்போதும் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். இதையடுத்து, வீடு திரும்பிய அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சிவகிரி போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.
Next Story

