விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி சார்பில்

X
விநாயகா மிஷனின் விம்ஸ் வளாக அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் வேலைவாய்ப்பு அமைப்பின் மூலம் மாணவர்களின் வேலை வாய்ப்புக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்புரை ஆற்றினார். இதில், சென்னை டிவைன் சுகாதார பராமரிப்பு நிறுவனத்தின் நிறுவனர் தீபிகா விஜயன் மற்றும் துணை நிறுவனர் விஜயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சுகாதார துறையில் பயன்படுத்தப்படும் மருத்துவ குறியீட்டு முறை சார்ந்த பயிற்சியினையும், அதன் தொடர்பான வேலைவாய்ப்புகள் குறித்தும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதில், கல்லூரியை சேர்ந்த இறுதியாண்டு படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் பங்கேற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அமைப்பின் அதிகாரி தமிழ்சுடர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் உமா மகேஸ்வரி, சிவரஞ்சனி ஆகியோர் செய்திருந்தனர்.
Next Story

