கோவை:முதல்வருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை

X
கோவை விமான நிலையத்தில் நேற்று பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசியவர், இதுதான் திராவிட மாடல அரசு முதல்வருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரிவதில்லை அதிகாரிகள் மறைக்கிறார்கள் முதல்வருக்கு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதிகாரிகள் அதனை மறைத்து விடுகிறார்கள். படித்து விட்டு சென்றிருந்தால் நன்றாக இருக்கும் முதல்வர் டெல்லி சென்று தாமிரபரணி, வைகை ஆறுகளை சுத்தப்படுத்த வேண்டும் என கேட்கிறார் ஆனால் இவர்கள் சாக்கடையை சுத்தப்படுத்திவிட்டு சென்று இருந்தால் நன்றாக இருக்கும். குறிப்பாக வாரிசு அரசியல் இருக்கக் கூடாது என்பதுதான் கமலின் முதல் கொள்கையாக இருந்தது. ஆனால் ஒரு ராஜ்யசபா சீட் கொடுத்ததும் வாரிசு அரசியல் இருக்கலாம் என்கின்றார், அவரவர்களுக்கு அவர்கள் தாய்மொழி முக்கியம் எந்த மொழி பெரியது என்பதில் கருத்து சொல்ல முடியாது நம்முடைய தாய்மொழி நமக்கு முக்கியம் அதைத்தான் சொல்ல வேண்டுமே தவிர குறிப்பாக, கமல் கன்னடத்தை பூர்வீகமாக கொண்ட முதல்வரால் பிரச்சனை வந்தது என்று சொன்னார் ஆனால் அந்த முதல்வர் படப்பிடிப்பிற்காக செல்லும்போது கன்னடம் வாழ்க என்று சொல்ல வேண்டுமென அங்கே இருப்பவர்கள் சொன்னார்கள் ஆனால் அம்மா அவர்கள் தைரியமாக தமிழ் வாழ்க என்று சொல்லிவிட்டு வந்தார் எனவே கமல் அவரது நிலையில் இருந்து மாரி ராஜ்யசபா சீட்டுக்காக இன்றைக்கு பேசி வருகிறார் என்றார்.
Next Story

