இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு தேர்வுகளில் சாதித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அரசு தேர்வுகளில் சாதித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு
X
மாரிமுத்து எம்.எல்.ஏ. வழங்கினார்
சேலம் சூரமங்கலத்தை அடுத்துள்ள ஆண்டிப்பட்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கிளை சார்பில் கல்வி எழுச்சி தினவிழா நடந்தது. ஜெ.மணிகண்டன் தலைமை தாங்கினார். மாணிக்கம், முனுசாமி, மணிமாறன், ஜெயக்குமார், நவீன், சம்பத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாரிமுத்து எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆண்டிப்பட்டியில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை புரிந்த மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.7 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் என 6 மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழாவில் மாவட்ட துணை செயலாளர்கள் ராமன், கந்தன் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. காஸ்ட்ரோ நவீன் நன்றி கூறினார்.
Next Story