சேலம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் சார்பில்

சேலம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் சார்பில்
X
நிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் மாதாந்திர மாவட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி ‘நிதி உங்கள் அருகில்’ என்ற தலைப்பில் சேலம், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சேலம் மற்றும் அதன் கீழ் செயல்படும் ஈரோடு மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களால் ஒருங்கிணைத்து நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இறந்த உறுப்பினர்களின் வாரிசுதாரர்கள் மற்றும் பயனாளிகள் ஓய்வூதிய ஆணைகள் மற்றும் பிற நல உதவிகள் வழங்கப்பட்டன. சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தின் சேலம் மண்டல ஆணையர் ராகேஷ் எஸ்.சேகர் ஓய்வூதிய ஆணைகள் வங்கினார். கிருஷ்ணகிரி மற்றும் ஈரோட்டில் ஓய்வூதிய ஆணைகளை மண்டல ஆணையர்-2 ஹிமான்ஷூ மற்றும் உதவி ஆணையர் ஜோதிர்மயா வழங்கினர். நாமக்கல் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓய்வூதிய ஆணைகளை அமலாக்க அதிகாரிகள் சரவணன், அன்பரசன் ஆகியோர் வழங்கினர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது, ‘மறைந்த தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களின் பயனாளிகளாக நியமிக்கப்பட்டவர்கள் சட்டப்படி பெற வேண்டிய நலன்கள், தொழிலாளர் வருங்கால வைப்புநிதி தொகை, வைப்பு நிதி சார்ந்த காப்பீடு மற்றும் ஊழியர் ஓய்வூதியம் திட்டம் ஆகியவற்றை பெற தகுதியுடையவராக இருந்தால் சேலம் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் அல்லது கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு மாவட்ட அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம்’ என்றனர்.
Next Story