சேலத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் சார்பில் விழிப்புணர்வு வாக்கத்தான், மாரத்தான் ஓட்டம்

X
சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் சார்பில் பொதுமக்களிடம் விளையாட்டு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெண்கள் மட்டும் பங்கேற்ற 3 கிலோ மீட்டர் வாக்கத்தான் நடந்தது. தொடர்ந்து ஆண், பெண்கள் கலந்து கொண்ட 5 மற்றும் 7 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த வாக்கத்தான் மற்றும் மாரத்தான் போட்டியில் 3 ஆயிரத்து 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போட்டியை தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் நாகராஜ் கொடி அசைத்தும், ரேவதி நாகராஜ் பலூன்களை பறக்க விட்டும் தொடங்கி வைத்தனர். பெண்கள் மட்டும் பங்கேற்ற வாக்கத்தான் போட்டியை அஸ்தம்பட்டி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் யுவராஜ் கொடி அசைத்தும், ஜே.சி.ஐ பெண்கள் அணி சார்பில் ஜனனி என்பவரும் தொடங்கி வைத்தனர். 7 கிலோ மீட்டர் மாரத்தான் ஓட்டமானது, காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கி அரசு கலைக்கல்லூரி, அஸ்தம்பட்டி ரவுண்டானா, மத்திய சிறை சென்று திரும்ப அதே வழியில் மீண்டும் மைதானத்தில் நிறைவடைந்தது. முடிவில் வாக்கத்தான் மற்றும் மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சந்தியூர் வக்கீல் ராசா.பார்த்திபன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தி புரோ ஆக்சன் ஸ்போர்ட்ஸ் மேலாளர் கார்த்திக் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
Next Story

