வேப்பனப்பள்ளி: எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி.

X
எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி வட்டாரத்தில் வேளாண்மைத்துறைமாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் (அட்மா) கீழ் ஆவல்நத்தம் பகுதி விவசாயிகளுக்கு எள் பயிரில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சியினை வேளாண்மை உதவி இயக்குநர் சிவநதி தொடங்கி வைத்து எள் பயிரில் ஊட்டச்சத்து செயல்படுத்தப்படும் திட்டங்கள்குறித்து விளக்கம் அளித்தார். இந்த பயிற்சியில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.கலந்துக்கொண்ட விவசாயிகளுக்கு தொழில்நுட்ப கையேடு மற்றும் துண்டு பிரசுரம் வழங்கப்பட்டது.
Next Story

