புளியங்குடி அருகே புல் அறுக்க சென்ற தொழிலாளி திடீர் பலி

X
தென்காசி மாவட்டம் புளியங்குடி மேலமந்தை பகுதியைச் சேர்ந்த சேகுமைதீன் (60), கால்நடை தீவனங்களுக்காக நேற்று மாலையில் புல் அறுக்கச் சென்றார். இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் புளியங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து புளியங்குடி காவல் துறையினர், சங்கரன்கோவில் சாலையிலுள்ள தனியார் தோட்டத்தில் சேகுமைதீனின் உடலை கிடப்பதாக தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர், இது குறித்து புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

