ஆற்றில் சிறுவர்களை காப்பாற்றி மாயமான நபர்

X
குமரி மாவட்டம் குழித்துறை தாமிரபரணி ஆற்றில் மார்த்தாண்டத்தை சேர்ந்த 13 மற்றும் 15 வயது மதிக்கத்தக்க இரு பள்ளி மாணவர்கள் வி எல் சி மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக நேற்று சப்பாத்தை கடந்து நடந்து வந்துள்ளனர். அப்போது தண்ணீர் இழுத்து சப்பாத் கீழ்ப்பகுதி கொண்டு சென்றது. சிறுவர்கள் அலறல் சத்தம் கேட்டு, துணி துவைத்து கொண்டிருந்த குழித்துறை தபால் நிலைய சந்திப்பு பகுதியை சேர்ந்த பீட்டர் உதவிக்கு ஆற்றுக்குள் துணிச்சலாக குதித்துள்ளார். மேலும் தண்ணீரில் சிக்கிய இரு சிறுவர்களையும் அவர் உயிருடன் மீட்டுள்ளார். இரு சிறுவர்களின் உயிரை காப்பாற்றிய பீட்டரால் தப்ப முடியவில்லை. தண்ணீரில் மூழ்கி மாயமானார். இவருக்கு மனைவியும் ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. பெண் குழந்தைக்கு சமீபத்தில் தான் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. உடனே குழித்துறை தீயணைப்பு படை அதிகாரி சந்திரன் தலைமையில் ஊழியர்கள் வந்து ஆற்றில் தேடினர். உடல் கிடைக்கவில்லை. அதன் பிறகு படகில் இன்று 2-ம் நாளாக தேடி வருகின்றனர். இதுகுறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story

