கோவை: கொலை வழக்கு- பொள்ளாச்சியில் எஸ்.ஐ. கைது!

கோவை: கொலை வழக்கு- பொள்ளாச்சியில் எஸ்.ஐ. கைது!
X
குற்றவாளிகளை தேடி விசாரணை நடத்திய அதிகாரியே இந்த முறைகேட்டில் ஈடுபட்டது காவல் துறையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் அதிர்ச்சி அளிக்கும் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் வீட்டில் சோதனை செய்த மகாலிங்கபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன், பறிமுதல் செய்யப்பட்ட 18 பவுன் நகை மற்றும் ரொக்கப் பணத்தை அதிகாரபூர்வமாக பதிவு செய்யாமல் பதுக்கி வைத்தது தெரியவந்தது. இது பற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் சென்றதும், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நேற்று கைது செய்தனர். குற்றவாளிகளை தேடி விசாரணை நடத்திய அதிகாரியே இந்த முறைகேட்டில் ஈடுபட்டது காவல் துறையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Next Story