பள்ளிகள் திறப்பு தாராபுரம் பஸ் நிலையத்தில் குடும்பத்துடன் குவிந்த பயணிகள் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?

பள்ளிகள் திறப்பு தாராபுரம் பஸ் நிலையத்தில் குடும்பத்துடன் குவிந்த பயணிகள் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?
X
பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில் தாராபுரம் பஸ் நிலையத்தில் குடும்பத்துடன் பயணிகள் குவிந்தனர். எனவே கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்ற எதிர் பாப்ர்பில் பயணிகள் உள்ளனர்.
தாராபுரம் பஸ் நிலையத்தில் 80-பள்ளிகள் திறப்பு தாராபுரம் பஸ் நிலையத்தில் குடும்பத்துடன் குவிந்த பயணிகள் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து பொள் ளாச்சி, கரூர், கோவை திருப்பூர், மற்றும் சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பஸ்கள் இதே போல் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் அதிக அளவில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் சென்று வருகின்றனர். இந்நிலையில் கோடை விடுமுறையை முடித்துவிட்டு பள்ளிகள் இன்று (திங்கட்கிழமை) திறக்கப்படுகிறது. இதனால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோடை விடுமுறையை முடித்துவிட்டு மீண்டும் தங்களது ஊர்களுக்கு செல்ல தாராபுரம் பஸ் நிலையம் வந்து தங்களது ஊர்களுக்கு செல்கிறார்கள். ஆனால் தாராபுரம் பஸ் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கும், திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் செல்ல பயணிகள் பஸ்கள் கிடைக்காமல் காத்திருந்தனர். மேலும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் பஸ்சில் ஏற முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் தாராபுரம் பகுதியில் இருந்து பஸ்கள் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story