மது போதையில் வாகனங்களை எரித்த நபர் கைது.

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் வாகனங்களை எரித்த நபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் கோபி. இவரது மகன் மணி ( 31) கறிக்கடையில் வேலை பார்த்து வருகிறார் . இந் நிலையில் கடந்த 1ஆம் (நேற்று )தேதி இரவு குடி போதையில் வந்த மணி வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மின்வாரிய அலுவலகம் அருகில் இருந்த பைக் மற்றும் டாட்டா ஏஸ் வாகனத்தை நேற்று முன்தினம் (மே.31) இரவு தீ வைத்து எரித்துள்ளார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் அளித்த புகாரின் பேரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு விசாரணசெய்து வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனம், சரக்கு வண்டிகளுக்கு தீ வைத்த கறிக்கடை மணியை அவனியாபுரம் போலீசார் நேற்று (ஜூன் 1) கைது செய்தனர். இப்பகுதியில் உள்ள இளைஞர்கள் போதையில் அருகில் உள்ள வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் புகுந்து குடிபோதையில் அத்திமீறி நுழைந்து கார். பைக், ஆட்டோ சரக்கு வாகனங்களை தாக்கி கண்ணாடி உடைப்பது தொடர்ந்து நடைபெறுகிறது. இதே பகுதியில் கார் பைக் உள்ளிட்ட வாகனங்களை சேதப்படுத்து 3வது முறையாகும். .
Next Story