சாலையின் குறுக்கே மாடு வந்ததால் விபத்து. வாலிபர் பலி.

X
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த பிரவீன் குமார் (24) என்பவர் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தில் உறவினரை பார்க்க இருசக்கர வாகனத்தில் நேற்று (ஜூன் 1) நண்பர் பிரேம் நசீருடன் (27) வந்துள்ளார். இருசக்கர வாகனத்தை பிரவீன் குமார் ஓட்டினார். இவர்கள் சொக்கலிங்கபுரம் சிவன் கோயில் அருகே வந்த போது மாடு குறுக்கே வரவே நிலை தடுமாறி விழுந்தனர். இதில் பிரவீன் குமார் உயிரிழந்தார். பிரேம் நசீர் லேசான காயத்துடன் தப்பினார். இந்த விபத்து குறித்து கொட்டாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

