கோவை: திமுக அரசு மக்கள் விரோத அரசு - எடப்பாடி பழனிசாமி

கோவை: திமுக அரசு மக்கள் விரோத அரசு - எடப்பாடி பழனிசாமி
X
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக அரசு மக்கள் விரோத அரசு எனக் கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவை குறித்த 27வது தீர்மானத்தில் துரோக அதிமுக என குறிப்பிட்டதை எதிர்த்து, துரோகம் செய்தது திமுகவென்றும், அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு, மக்கள் நல திட்டங்கள் சிறப்பாக இருந்ததையும் தெரிவித்தார். கடந்த நான்கு ஆண்டுகளாக திமுக அரசு மக்கள் விரோதமாக செயல்பட்டு வருகிறது என்றும், தினமும் குற்றச்செயல்கள் நடைபெறுவதை ஊடகங்கள் வெளிக்கொணர்ந்து வருவதாகக் கூறினார். கல்விக் கொள்கை குறித்து திமுக அரசு விமர்சிப்பது வெறும் நாடகமென விமர்சித்த எடப்பாடி, மத்திய அரசில் 16 ஆண்டு காலம் இருந்த திமுக அதற்கு என்ன நடவடிக்கை எடுத்தது என கேள்வியெழுப்பினார். முதலமைச்சர் மதுரை வருகையின் போது சாக்கடை மறைக்கப்பட்டதைக் குறிப்பிட்டு, இது மோசமான ஆட்சிக்கு சான்று எனக் குற்றம்சாட்டினார். ஆதவ் அர்ஜுனா அதிமுக குறித்த பேச்சை குறித்து, அவரே ட்வீடே போட்டுவிட்டார் என்றும், அதிமுக-தேமுதிக இடையேயான உறவை யாராலும் உடைக்க முடியாது என்றும் தெரிவித்தார்.
Next Story