திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயிலில் வைகாசி பெருவிழா
நாகை மாவட்டம் திருக்குவளையில், தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ தியாகராஜ சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. சப்தவிடங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோயிலில், தருமபுர ஆதீனத்தின் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் அருளாசியுடன், வைகாசி பெருவிழா கடந்த மே மாதம் 23 -ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாள்தோறும் கிளி, சிம்மம், அன்னம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி எழுந்தருள வீதியுலா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு வசந்த உற்சவம் நடைபெற்றது. சிவ வாத்தியங்கள் முழங்க, சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீ தியாகராஜ சுவாமி பிருங்க நடனமாடி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சிறப்பு மகா தீபாராதனைக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான உபய ஏற்பாடுகளை பி.டி.எம் செந்தில் குடும்பத்தினர் செய்திருந்தனர். விழாவில், கோயில் நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள், பக்தர்கள், பெரியோர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Next Story



