அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
திருவள்ளூர்: நடிகர் விஜய் கட்சியில் 18 முதல் 21 வயது உடையவர்களும் திமுகவில் 22 வயதுக்கு உட்பட்டவர்களும் பூத் கமிட்டி உறுப்பினர்களாக இருக்கும் போது 60 முதல் 80 வயது உள்ள அதிமுக நிர்வாகிகளால் ஓடி ஆடி தேர்தல் வேலை செய்ய முடியுமா ? என முன்னாள் அமைச்சர் பொன்னையன் கேள்வி எழுப்பி உள்ளார், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வடக்கு மாவட்ட அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட செயலாளர் சிறுனியம் பி பலராமன் தலைமையில் நடைபெற்றது, இதில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கலந்து கொண்டு வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் பணி குறித்து ஆலோசனைகளை வழங்கினார், அப்போது பேசிய அவர் நடிகர் விஜய் கட்சியில் 18 முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், இதேபோன்று திமுகவில் உதயாநிதி தலைமையின் கீழ் இளைஞர் அணியில் 22 வயதுக்கு உட்பட்டவர்கள் பூத் கமிட்டி உறுப்பினர்களாகவும், கிளைச் செயலாளர்களாகவும் இருக்கும்போது. 60 முதல் 80 வயது வரை உள்ள அதிமுக கிளை செயலாளர் தேர்தலுக்கு இன்னும் 10 மாதமே உள்ள நிலையில் 20 வயது உள்ள திமுக இளைஞருடன் 20 வயது உடைய விஜய் கட்சி இளைஞர் உடன் ஓடி ஆடி வேலை செய்ய முடியுமா ? இது நடக்கிற காரியமா ? முடியாது என்ற காரணத்தினால் தான். கட்சித் தலைமையும் எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றாக இணைந்து முடிவெடுத்து 45 வயதிற்கு உட்பட்டவர்களை கட்சிப் பொறுப்புகளில் நியமித்து வருவதாகவும், மூத்த நிர்வாகிகள் ஒத்துழைக்கத் தவறினால் அவர்கள் கட்சியை பலப்படுத்த ஒதுங்கி தான் இருக்க வேண்டும், விலகி இருந்து ஆலோசனை வழங்க வேண்டும் என கூறிய முன்னாள் அமைச்சர் பொன்னையன் வாக்காளர் பட்டியலில் பல இடங்களில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படாமல் இருப்பதால் இதை பயன்படுத்தி திமுகவினர் கள்ள ஓட்டு போடுவார்கள் என்றும், இதனைத் தவிர்க்கும் பொருட்டு இணையதளத்தில் அதிமுக தொழில்நுட்ப அணியினர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டிய இறந்தவர்களின் பெயர்களை இணையதள செயலியில் பதிவிறக்கம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார், கடந்த உள்ளாட்சி மன்றம், சட்டமன்றம், நாடாளுமன்ற தேர்தல்களில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எதிர் பார்த்த வெற்றியை பெறாததால் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்போடு அதிமுக தலைமை கட்சியில் பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகிறது அதன் ஒரு பகுதியாக 45 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் இருந்து பதவிகளைப் பறித்து இளைஞர்களுக்கு கட்சி மேலிடம் வழங்கி வருகிறது இதனால் எம்ஜிஆர் காலம் முதல் கட்சியில் பணியாற்றி வரும் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
Next Story